Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts
Mar 26, 2013
என் டைரியில் மறைத்த பக்கங்கள்
இது கடந்த சில மாதங்களில் சாதியை வைத்து எனக்கு நேர்ந்த அனுபவங்களாலும் இன்று முழு மூச்சாக தமிழ்மகனின் 'வெட்டுப்புலி' படித்து முடித்த பாதிப்பிலும் எழுதியது
ஈ.வெ.ரா இன்று இருந்திருந்தால் பார்ப்பனர்களுக்காக மற்ற சாதி உளுத்தம்பருப்புகளை நிச்சயமாக எதிர்த்திருப்பார் . தங்களின் உரிமையை பறிக்கிறார்கள் என எந்த மயிலாப்பூர் மாமாக்களும் நடு ரோட்டிற்கு வந்து எவனையும் வெட்டவில்லை, கொளுத்தவில்லை . அதற்காக பருப்பு சாதம் சாப்பிடுவோருக்கு பலம் இல்லை என்று அர்த்தமல்ல, மாறாக கிடைத்த சொற்ப FC Quota விலும் பெரிதாக படித்து இந்த நாட்டில் இருப்பது சாபகேடு என்று பறந்துவிடுகிறார்கள்.
அந்த காலத்தில் நடந்த சில அறியாமை விஷயங்களை வைத்து அரசியலுக்காக இன்னமும் அரைத்த மாவையே அரைக்கும் சில (வெளுத்த ) உளுத்தம்பருப்புகளுக்கு நாங்கள் சொல்ல நினைப்பது : அந்த தாத்தா பி.ஜெ.பி யுடன் கூட்டணி வைக்கும் போதும் வேடிக்கை தான் பார்த்தீர்கள், அந்த அம்மா சங்கராச்சாரியாரை கைது செய்த போதும் வேடிக்கை தான் பார்த்தீர்கள் , உங்கள் சாதி வெறியினால் பிற மொழிகள் எதுவும் கற்காமல் போனவர்கள் இன்று வேலை வாய்ப்புகளில் திண்டாடுவதையும் புலம்புவதையும் வேடிக்கை தான் பார்க்கிறீர்கள் (மற்ற மொழிகள் கற்பது வெறும் add on advantages அன்றியே தவிர தமிழ் மட்டுமே நம் தாய்மொழி ! ) . சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்குவதற்கு கூட நமக்கு புடிக்காத பார்பனனின் பாட்டு தான் தேவைப்படுகிறது . இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை . சொந்த காரணங்களுக்காக சாதியை அரசியலாக்கி எங்களை போன்ற படித்த முற்போக்குவாதிகளை கூட சாதி சாக்கடைக்குள் இழுத்து சமுதாயத்தை நாசமாக்குறீர்கள். இன்று வரையிலும் நம் நாட்டை சீரழிக்கிறார்கள் , நமக்கு அரசு பணிகள் கிடைப்பதை தடுக்கிறார்கள் என நீங்கள் யாரை குற்றம் சாட்டுகிறீர்களோ , அவர்கள் எல்லோரும் அமைதியாக தங்கள் கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் , ஒழுங்காக வரி செலுத்துவது உட்பட . பிராமண சாதியில் பிறந்திருந்தாலும் எனக்கு கடவுள் வழிபாட்டில் அதிகம் ஈடுபாடு இருந்ததில்லை , என் வீட்டில் யாரும் என்னை அதற்காக வற்புறுத்தியதும் இல்லை. அவர்கள் மேல் சாதி , இவர்கள் கீழ் சாதியென எங்கள் வீட்டில் யாரும் ஒருநாளும் பேசி கேட்டதும் இல்லை . Infact , எனக்கு பெரியாரை அறிமுகபடுத்தியதே என் 'பிராமண' தந்தை தான் . இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் வீட்டில் தெரிந்து கொண்டதை விட நாட்டில் சாதியை ஒழிக்கிறோம் என அரசியலுக்காக போலியாக போராடும் உளுத்தம்பருப்புகள் மூலமாக தான் சாதியை பற்றி அதிகம் அறிந்திருக்கிறேன் . என் சாதியை பிரதானமாக முன்வைத்து நான் எந்த recommendation 'னிலும் வேலை வாங்கியதும் இல்லை சமுதாயத்தில் என் religious identity 'ஐ வெளிகாட்டியதும் இல்லை . ஆனால் இன்றும் தமிழ் நாட்டில் சில இடங்களில் என்னை என் சாதியை வைத்து எடை போடுவதை நான் பார்த்திருக்கிறேன். நாத்திகம் என்பதை இங்கிருக்கும் சில பருப்புகள் , பிராமணர்களை எதிர்ப்பது என current generation க்கு தவறாக போதிக்கின்றனர்.எல்லா சாதியும், மதமும் ஒன்று தான் என நினைக்கும் எங்களையும் தேவையில்லாமல் உசுப்பேற்றுகிறார்கள். 6 கோடி மக்களுக்கு வெறும் 3 சதவிதம் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினரால் ஒரு தீங்கும் விழைத்திட முடியாது. ஆனால் இதற்கு மாறாக அந்த மூன்று சதவிகித மக்களுக்கு மற்றவரால் வேண்டுமானால் ஏதாவது தீங்கு நடக்க வாய்ப்புள்ளது.
எது எப்படியிருந்தாலும் சாதிகள் மதங்கள் இல்லாத ஒரு தமிழ் நாட்டிலே வாழ தான் நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம். அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். இதைத்தாண்டி சாதிகள் பற்றி பேசுவார்களேயானால்… த்தா அந்த சாதி சாக்கடையில் விழுந்து இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .
Subscribe to:
Posts (Atom)